Thursday, July 5, 2012

..............சிட்டுக்குருவி.............



ஒரு சிட்டுக்குருவி 
எங்கள் வீட்டின் 
மோட்டார் வண்டியின்
காது வடிவ
பக்கக் கண்ணாடியின்
விளிம்பில்
தினமும் வந்தமர்கிறது..

யதேச்சையாய் தென்படும்
அக்குருவி
விளிம்பில் சிரத்தையுடன்
நின்று குனிந்து
கொத்திக்கொண்டிருக்கிறது..
ஆடியில் தெரியும்தான்
பிம்பம் பார்த்து....

அரிதாகிவிட்ட
அப்பட்சியை
நீங்களும் பார்த்திருக்கலாம். 

ரைஸ்மில்லின் பரந்த
வெளிகளில்
உலர்த்திய நெல்மணிகளை 
கூட்டமாக வந்து
கொத்திச்செல்லும் 
குறும்பறவை கூட்டத்தில் 
ஒன்று அது ..

அதனை ரகசியமாய் 
பார்ப்பவர்களுக்கு
அதனின் இச்செய்கை
தெரியலாம் தன்மீதான 
வெறுப்பாக 
இருக்குமென்று ...

அல்லது....

ஆடியில் படிந்திருக்கும் 
காலப்படிம
தூசுக்களை 
சுத்தம் செய்வது போலவும்
தோன்றலாம்...

ஆனால் ...

யாருக்குமே புரிவதில்லை 

தன்னிலிருந்து 
மற்றொன்றை
உயிர்ப்பிப்பதற்கான 
அதனின் 
இறுதி  முயற்சியாகவும்
விளங்கலாம் என்று..

ஒரு செல்போன் 
சிணுங்கும்போது 

ஒரு சிட்டுக்குருவியின் 
அசரீரி 
மெல்ல 
அமிழ்ந்து அடங்குகிறது....  
என்றென்றும் நேசமிகு..
வை.ர..

No comments:

Post a Comment