பின்னிரவுகளில்
மிகத் தாமதமாய் துயிலச் சென்றாலும்..
விடுவதில்லாமல் துரத்துகிறது ...
அமானுஷ்ய கனாக்கள் ...
உலவு ஊர்தி ஒன்றினை
மேகப்பரப்பில் மீட்டிச் செல்கையில்
அது
தீக்குளிப்பு செய்து கொண்டு
மடிவது போலவும் ..
பின்னொரு நாளில்
உறைந்து போன ஆற்றில்
எளிய தாக்கையில்
வலிய மீனினைப்
பிடிக்க முயல்வதான காட்சியும்
வருகிறது..
தோள்பட்டையில்..
வயிறு உருண்ட..
மைனாவைச் சுமந்து கொண்டு
சில அடி உயரம்
மேலெழும்பி மெல்லப்
பறக்கமுடிவதாயும்...
கடைசியாய் வந்தது..
கனவுகளினூடாக வரும்
நிராசைகளும்
நனவாகாமல்.. நினைவாகுகின்றன..
நேசமிகு வை.ர..