Wednesday, February 15, 2012

!!!!........காதலின் மொழி ......!!!!



உன்னை நான் ரசிக்கிறேன் என் சுவாசம் நீயே..! நேசம் நீயே..!
எந்தன் நினைவே...! பகலின் கனவே..! நீ வாராயோ.....?
சாலைகளில் உன்னைக் காணாமல் அலையுது பனித்துளி....

மேகத்தின் மழையாய் உன்னில் யாசித்தேன்..
மௌனமும் கொல்லவே தினம் உன்னால் பாதித்தேன்
ஊரெல்லாம் சுற்றினேன் உன்னில் என்னை மாற்றினேன்
பெண்ணல்ல இவள் என்று ஓயாமல் சுற்றினேன்

பேசிய வார்த்தைகள் மிச்சம் போக மீதி இருப்பதென்ன...?
இனி பேசி புரியவைக்க என்னில் ஒன்னுமில்ல..
அவளை என்னவென்று சொல்ல..? நான் அழகை பார்ப்பதில்ல...?..!
மனசு ரெண்டும் மோதி மோதி காதல் பத்திக்கிச்சு...
மாலை மாற்ற நேரம் பார்க்கவேளைவந்திடிச்சி...
ஆ....ஆ... சிக்கி முக்கி உரசி பத்திக்கிச்சு..
சின்ன சின்ன ஆசைகள் தொத்திக்கிச்சு..

உள்ளே வெளியே மனசில் புயலே அடங்கி தீராது.........
உன்னோடு நானும் என்னோடு நீயும் உணர முடியாது...

விழி மூடிப் பார்க்க விண்மீன்கள் தோன்றும்
நிலவென்றே உன்னை நினைத்து தொட்டுவிடப்பார்க்கும்
எந்த கவிஞன் கூட எழுதி விடுவான்
உந்தன் பெயரை எந்தன் பாட்டில் படிப்பான்
எந்த மேகம் கூட எழுந்து போகும்
உன்னை கண்ணால் காணவே
மண்ணில் விழ வரம் கேட்கும்......

சில நாட்கள் நகரும் உந்தன் நினைவில் நான் நடந்தால்.....!!
நீல வானம் கூட நிறமும் மாறும் நீ ரசித்தால்.....!!.
தடயங்கள் போலே உனைத்தொடர்ந்திட வா......!!
தாயென்ற உறவுக்குத் தாரமாய் நீயும் வா வா.....!!!


நேசமிகு
வை.ர..
                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment