அஜித்காந்த் vs கிருஷ்ணதாஸ்
( B.E BEFORE ELECTION )
( B.E BEFORE ELECTION )
தாஸ்:என்ன அஜித்காந்த் எப்படி இருக்கீங்க ?
காந்த்: ஏ....தமிழ்நாட்டுல மொத்தம்....
தாஸ்: அய்யய்ய...சினிமா வசனம் மாறியே பேசிக்கிட்டு ...
இப்ப நா என்ன கேட்ட .நல்லா இருக்கீங்களான்ன..?
காந்த்: ஏ ...விளக்கங்கேட்டா சொல்லணும் அதுதான்டா
தமிழனோட பண்பாடு....
தாஸ்: ஹலோ யாரு...? தன்ராஜா ஆமா.. ஆமா..
டெல்லிலதான் இருக்க ..
காந்த்: என்ன டெல்லியா....? மிஸ்டர் தாஸ்...!!
ஸ்டேட்டுக்கு உள்ளயே சீட்கெடைக்குமான்னுதெரியலஅதுக்குள்ளயே டெல்லி கனவா..? அன்பு
இனிமே மணி ஆட்ட வேண்டியதுதான் ...!!
தாஸ்: கருப்பு எம்.ஜி .ஆர் அவர்களே ...!படத்துல
பஞ்ச டயலாக் பேசனோமா fight பன்னமா
அதோட நிறுத்தீகொங்க ..அதவிட்டுட்டு
பாலிடிக்ஸ் எதுக்கு..?
காந்த்:ஏ ...இதப்பாரு.. நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு
சொல்றதுக்கு நீ யாருடா ..?அதுக்கு தேர்தல் கமிசன்
இருக்கு.. அவங்க சொல்லட்டும் நாங்க என்னைக்காவது
அரசியல்வாதீங்க நடிக்க வரக்கூடாதுன்னு ..சொல்லியிருக்கோமா..?
( சிரித்துக்கொண்டே ஹீ... ஹீ.. ஹீ..)
தாஸ்:தம்பி அஜித்காந்த் அரசியலே நாடகம்தான..
காந்த்: அதத்தான் நானும் சொல்ற உன்ன மாறி ஆளுங்க
பொறுப்பில்லாம ஜாதி வெறிபிடிச்சி
அலையறதாலதான் நாட்டுல தீவிரவாதம்
வளந்துகிட்டேவருது.. பாகிஸ்தான்ல இருந்து
பாடர் வழியா ஈஸியா தீவிரவாதிங்க நுழைஞ்சு
நாட்டையே சுடுகாடாக்கிட்டு இருக்காங்க..
( பொதுமக்களுக்கு ஒன்னு மட்டும் சொல்ற ஜாதி
ஜாதின்னு வெறிபிடிச்சி அலையாமஎல்லாரும்
இந்தியன்னு நெனச்சு ஓட்டுப்போடுங்க அப்பத்தா
நாட்டுல நல்லாட்சிநடக்கும் நீங்களு நல்லாயிருப்பீங்க....)
தாஸ்: மிஸ்டர் அஜித்காந்த் இப்ப ஏன் கேமெரா முன்னாடி
பேசறா மாறி பேசறீங்க ...
இங்க ஒன்னும் ஷூட்டிங் நடக்கல ...
காந்த்: ஏய் நிறுத்துடா......!! நீ இப்டியே பேசிட்டிருந்தா
இன்னும் கொஞ்ச நேரத்துல
இங்க ஷூட்டிங்கே நடக்கும் டா ...
தாஸ்: ஏம்பா வாசல்ல நிக்கற டாட்டா சுமோவ எடுத்து
ஷெட்டுல பார்க் பண்ணு..அடிச்சி உடைச்சாலும்
ஒடைச்சிடுவா...
மீண்டும் ஒர் நாள்....
காந்த்: 41 தொகுதி கொடுக்கற கட்சியோடதான் கூட்டணினு
பேசனிங்க தி.மு.க 31 தா குடுத்துருக்காங்கலாம் ..
தாஸ்:அரசியல்ல இதல்லாம் சகஜம்பா மீடியா கேக்கறப்ப
கொஞ்சம் Build up இருக்கத்தான் செய்யும் கட்சிக்குனு
ஒரு கவுரவம் இருக்குல்ல ...
காந்த்:இப்ப மட்டும் என்ன வாழுது... சரி சரி பாக்கெட்ல
வாழைப்பழத்தோல்இருக்கு எடுத்து கீழ போடுங்க ...
வழுக்கி விழுந்துடாதீங்க ..
தாஸ்: என்ன அஜித்காந்த் கொரலிவித்த எல்லாம் காட்றிங்க..?
காந்த்:அரசியல்ல இதுவும் சகஜம்தா ...!
தாஸ்: முடியல..... இந்த பொழப்புக்கு போய் பிச்ச எடுக்கலாம்..!
காந்த்:போய் எடு யார் வேணான்னது...??...!!
தாஸ்:தேர்தல் முடியட்டும் யார் பிச்ச எடுக்கப்
போறாங்கன்னு தெரியும்..??..!!
காந்த்: ம்ம் ..!! நீ தேர்தலுக்கு முன்னாடியே உன் தொகுதி மக்கள் கிட்ட
பிச்ச எடுக்க ஆரம்பிச்சிட்டியே ...உன்ன அரசியல்வாதி வேணும்னா
கூட்டணிக்கு வச்சிக்கலாம்...! ஆனா இந்த நாட்டு மக்கள் எப்பவும்
மன்னிக்க மாட்டாங்க..... இந்த எலக்சன்ல உனக்கு மட்டுமில்ல
உன் கூட்டணிக்கட்சி... ஆளுங்கட்சி... எல்லாத்துக்கும் பாடம்புகட்டுவ நீ வேணும்னா சாதி பேரை சொல்லி சீட்டு
வாங்கலாம்..ஓட்டு வாங்கலாம்.. ஆனா உன் சாதி
வெறி என் கால்ஷீல....கெடக்குற தூசி மாறி டா ....ம்ம்ம் வரட்டுமா ...
No comments:
Post a Comment