Saturday, June 30, 2012

.....................சகுனி..........




 ஒரு frame ல கூட நிஜ பாலிடிக்ஸ் வாடையே இல்லாமல் politics பற்றி சொல்ல வந்திருக்கிறான் சகுனி..கவர்ன்மன்ட் கிட்ட இருந்து தன்னோட பூர்வீக வீட்ட மீட்கனும்னு சென்னைக்கு வர்ற ஹீரோ சகுனி  ஆட்டம் ஆடி கேம் ஓவர்ல எப்படி வீட்ட காப்பத்தறாரு என்பதே கதை....
 பின் மண்டைய சொரிஞ்சிகிட்டே வழக்கம்போல ஏய்...ஏய் ....ப ப பா ..னு கேரக்டர பாக்காம திரும்பி நின்று பேசும் பிரகாஷ்ராஜின் emotional  dialogues பல படங்களில் பார்த்து அலுத்ததுதான் .
முதலமைச்சரான பிரகாஷ்ராஜ் 6 கோடி தமிழன்ல இருந்து ஒருத்தர்கிட்டநேரடியா..பேச்சுவார்த்த நடத்துவதுகாமராஜர் காலத்துல கூட நடக்காது ..சகுனினு  பேர் வச்சதாலவோ என்னவோஅரசியல் அரங்கத்துலஹீரோ பேச்சாலயே எல்லாத்தையும் சாதிக்கிறார் ...(ஒரு வேலை இதுக்கு பேரு ராஜ தந்திரமோ.....?)

அப்புறம் ஒரு கொஸ்டின் பாஸ் ...(டைரக்டர் கிட்ட)எதிரிய மாட்டி விட போலீசுக்கு கஞ்சா கேச தவிர வேற ஏதும் கிடைக்காத எல்லா படத்திலையும் ...இனிமே புதுசா ஏதும் யோசிக்கலாம் ..!!
அரசியல்வாதிங்க கிட்ட போய் சாதாரண மக்களுக்கு என்ன செஞ்சிருகீங்கனு கேக்குறதும் அடிமட்ட தொண்டன தேர்தல்ல நிருத்தனுங்கிறதும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ...படத்தோட first  half கு மட்டும் பார்மாலிட்டிக்கு  வந்து போறாங்க heroine  ப்ரனிதா ....ஸ்லோ மோசன்ல ஹேர் காத்துல பறக்க heroine வருவத எத்தன படத்துலதான் பாக்றது ...??..!!அவ்...G .V பிரகாஷ்குமார் background ல ஸ்கோர் பண்றார் as usual ..கோட்டரு பத்தல பாட்டு மட்டும் முனுமுனுப்பு ரகம்..குடிய பத்தி பாட்டு டான்சுன்னு ...பீர் பொங்கவச்ச புல் பாட்டுக்கு கீழ drug லைன்...(அதாங்க ...ஸ்க்ரீன்ல போடுவாங்களே avoid alcohol னு ) 3 நிமிசத்துக்கு போட்டது புதுசு (எப்டியோ டாஸ்மாக்ல சேல்ஸ் கொறஞ்சா சரி ...)
இட்லிகட ராதிகா ஆச்சி நீங்கதான் ஆடியன்ஸ்கிட்ட ஈசியா ரீச் ஆவறீங்க ..அதுசரி கந்துவட்டிக்கு விடறவங்க கவுன்சிலரானா ஓகே ..மேயர் ஆனதெல்லாம் ...(சாரி சகுனியால் ஆக்கப்படுவது ) ரொம்பவே டூ மச் ....
ரஜினி கமல்னு சந்தானமும்  கார்த்தியும் மாறி மாறி பேர் சொல்லி கூப்ட்டு அடிக்கிற லூட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு ரெஸ்பான்ஸ்..இருந்தாலும் ...காமெடி பத்தல பாஸ் ...சாரி...
மொத்தத்துல பீடி சாமியார கோடி சாமியாராக்கி ...பெருமால CM ஆக்கி...ப்ரகாஷ்ராஜ...கடைசியா ஜெயிலுக்கனுப்பி ....கவர்ன்மன்ட் கிட்ட இருந்து தன்னோட வீட்ட save பண்ற இதுக்கெல்லாம் பேருதான் சகுனித்தனமா ....?
 மொத்தத்துல லாஜிக் இல்லாம மேஜிக் பண்ண ட்ரை பண்ணிருக்கு...சகுனி ......

No comments:

Post a Comment