தோழா இரு தீயா நீயும்
தானா எந்த பேரு வரும்..?
தடையில்லை அணையில்லை உலகத்திலே..!!
சரியா உனக்கென்ன என்ன..?
தவறா உனக்கென்ன என்ன..?
பழியில்லை பயமில்லை உனக்கெதிரே..!!
போராடு உனக்கென்ன துணிவோடு
சரியென்று பார்த்தாலே சாதிக்க முடியாது
விதியோடு தடையில்லை விளையாடு
உன் பேரை சொல்லாதா உருவாகும் வரலாறு..?
நானா..? வந்து சேரு நீயும்
நீ வா வருங்காலம் வரும்
நிழல்களை நிஜங்களை சிறைபிடிப்போம்
நாளை நல்ல வேலை வரும்
நேரம் நல்ல சேதி தரும்
முத்துக்களை சிப்பிகளும் சிறைபிடிக்கும்
மாறாமல் வாழ்க்கை இங்கேது..?
மாற்றம் ஒன்றேதான் எப்போதும் மாறாது..!!
காணாத கனவெல்லாம் இன்றோடு...
நனவாகும் நன்றாக நம்பிக்கை நடைபோடு...!!
No comments:
Post a Comment