Monday, July 2, 2012

...............சென்னைத்திரை.......

''சார் ...ஷாட் ரெடி ''டைரக்டரின் குரல் கேட்டது .
ஓரமாய் லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஹீரோ ..சட்டென்று ஹாப் செய்துவிட்டு 
மீதமிருந்த 4 வரி குத்து பாடலிற்கும் ஆடி முடித்தாயிற்று ..

''சாரா ''...expression பத்தாது ...இன்னும் நல்லா...இங்கபாரு..டைரக்டர் மேலும் விளக்கினார் .
''என்னம்மா நீ மும்பை ஹீரோயின்லாம் நல்லா தமிழ் பாட்டுக்கு expression குடுக்குறாங்க ..

நீ தமிழ் பொண்ணு ...என்ன சொல்றது ...??
ஹிம் ..producer அப்பவே சொன்னாரு ..நான்தான் தமிழ் பொண்ணுதான் வேணுன்னு ஒத்த கால்ல நின்ன ..
எல்லாம் என்ன சொல்லணும் ..

முனுமுனுத்தார் டைரக்டர் ..

''ஏம்பா அடுத்த சீனுக்கு செட் பிராபர்ட்டி எல்லா எடுத்துட்டு வா ..
அசிஸ்டன்ட் ஆளுக்கொரு பக்கமாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்..

ஒருவழியாய் ஷூட்டிங் முடித்தாயிற்று ...

மாலை 6 மணி 
புது ஹம்மர் காரில் வந்து இறங்கினார் ...producer
மேனேஜர்  எதிரில்  வந்தார் ...வணக்கம் வைத்தார் ....இவர் கண்டும் காணாமல் டைரக்டர் அறைக்கு சென்றார் ..

அடுத்த நாள் சண்டை காட்சிக்கு வேண்டியதை அசிஸ்டன்ட் களிடம்  சொல்லிக்கொண்டிருந்தார் டைரக்டர் ...
உள்ளே வந்த producer அன்றைய ஷூட்டிங் பற்றி கேட்டார் ...

''ரொம்ப பிரமாதமா வந்துருக்கு சார் ''...
2012 ஹிட்ஸ்  வரிசையில வரும் .....நல்ல பேரு கெடக்கும் ..
''படம் 100days  ...சார்'' .. நம்புங்க நான் காரண்டி..என்றார் டைரக்டர் .

''ஹீரோயின் கால்ஷீட் கம்மியா இருக்கு.''
 சீக்ரம் போர்ஷன்ஸ்  முடிச்சுருங்க... கடைசியாக வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு  கிளம்பினார் ..producer

60 நாட்கள் கடந்தன.
அன்று வெள்ளிக்கிழமை.
சென்னைத்திரைக்கு ஏறக்குறைய 6 படங்கள் போட்டியில் இருந்தன ...2 பெரிய ஸ்டார்ஸ் படங்களோடு சேர்த்து..

சிட்டியில் பிரபல திரையரங்கில் டைரக்டரும் producer ம்..உட்கார்ந்திருந்தனர் ..
முதல் நாள் ஏராளமான கூட்டம் ...எதிர்பார்புகளுடன் அரங்கம் நிரம்பி வழிந்தது ....

ஆபரேட்டர் ரூமிலிருந்து சில நிறக் கதிர்கள் திரையின் மீது பட்டு பாத்திரத்தை
 தூக்கி எறியும் போது வரும் சவுண்டைப்போல dts காதைப் பிளந்தது .

வெளிச்சம்   கண்களைக்கூச கூடவே ஒலிக்க ஆரம்பித்தது வசனம் ..

''டேய் ..எழுந்திருடா.. எழுந்திரு ..மணி பத்தாவுது ...இன்னுமா    தூங்கற'' ..அம்மாவின் குரல் கேட்டது ..

யாரையோ ப்ரோடிசர போய் பாக்கணும்னு சொன்ன ..இன்னும் தூங்கினுகீற..
போ போய் குளிச்சிட்டு நாலு   வா துன்னுட்டு  சீக்ரம் கெளம்பு...

''நாம சொல்றத எது கேக்குது ..அது பாட்டுக்கு படம் எடுக்க போற...சினிமா சினிமான்னு தெனம் ஊர சுத்தினிகீது...
அம்மா புலம்பினாள்..  

No comments:

Post a Comment