சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய துணைவேந்தர்
திரு. திருவாசகம் அவர்களுக்கு பிரியா விடையளித்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக காணிக்கையாக்கிய வரிகள் ......
திரு. திருவாசகம் அவர்களுக்கு பிரியா விடையளித்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக காணிக்கையாக்கிய வரிகள் ......
தொன்மம் படிந்திருக்கும்
இதழியல் தொடர்பியல் துறை இது ...
உங்களால்தான்
உயிர்த்தெழுந்தது....
பதவியேற்ற
ஒரு திங்களில்
முற்றம் பிரசவம் ..
கடல் கடந்தும்
பரந்த புகழால்
பரவசம் ..இது மூன்றாம் வருடம்
இது உங்களால்தான் சாத்தியம்...
நீங்கள் தோள் தூக்கி வளர்த்த
குழந்தை ''முற்றம்''
சுற்றம் எங்கும்
எங்கள் கரம் பற்றி வரும்..
வெற்றிக்கொடி ஏற்றி வரும்..
மாணவர்களுக்கு....
தன்னம்பிக்கை
தரமான கல்வி
அதிநவீன வகுப்பறை
ஆய்வகம்... நூலகம் ...
என்று ....
எல்லாமும் கொடுத்தீர்கள்...!!
ஆனால் எப்போதும்
எளிமையாய் நீங்கள் ...!!
மாணவர் குறை களைய
புகார்பெட்டியை
பதித்தீர்கள் ...அன்று
புகார்பெட்டி
பூக்களால்
நிரம்பியுள்ளது ...இன்று
நினைவிருக்கட்டும்
பூக்களல்ல அவை
எங்கள் புன்னகை ..!!
திருவாசகத்திற்கு
உருகாதார்
ஒருவருமில்லை
திருக்குறள் வாசமாய்
உடனிருப்போம்
நாங்கள் என்றும்
உங்களின் பிள்ளை...
நெஞ்சார்ந்த நினைவுகளுடன் ...
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
பேராசிரியர்கள் ,மாணவர்கள், ஊழியர்கள்
சென்னைப்பல்கலைக்கழகம்
சேப்பாக்கம்
சென்னை
No comments:
Post a Comment