கடிதங்கள் அல்லது நாம் சேமித்து வைத்திருக்கும் நினைவுப்பொருள்களை நிலவுக்கு அனுப்பி வைக்கும் புதிய சேவையை மூன் மெயில் என்ற பெயரில் அஸ்ட்ரோபோடிக் எனும் அமெரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காகக் குறைந்தபட்சம் 460 டாலர் முதல் 26 ஆயிரம் டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் வகையில் லூனார் விண்கலம் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுப்பகுதியில் வைக்கப்பட்ட நமது பொருள்கள் படம்பிடித்து நமக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்காக நாசாவுடன் ஒப்பந்தமிட்டுள்ள இந்த நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் ராக்கெட்டை அனுப்ப உள்ளது.
ராக்கெட்டில் சென்று, நிலவின்
மேற்பகுதியில் தரையிறங்கும் லூனார் லேண்டர் விண்கலம் ஆனது, அது எடுத்துச்சென்ற பொருள்களை
(ஆம்.. நம்முடையதேதான்) நிலவின் மேற்பரப்பில் சேர்த்துவிடும். இந்த சேவை தொடர்பாக அஸ்ட்ரோபோடிக்
நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி ஜான் தார்ண்டன் கூறுகையில்:
அஸ்ட்ரோபோடிக் லூனார் லேண்டர்
மூலமாக உலகெங்கிலுமுள்ள தனி நபர்கள் தாங்கள் விரும்பும் நினைவுப்பொருள்களை நிலவுக்கு
அனுப்ப முடியும். நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் வணிக ரீதியிலான முதல் சேவை மூன்
மெயில் என்ற வரலாற்றை இது உருவாக்கும். இந்த சேவைக்கு குறைந்தபட்சம் 460 டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால்,
காதல், திருமணம், பிறந்த நாள், நினைவுச் சின்னமாக நாம் வைத்திருக்கும் பொருள்கள், அன்பிற்குரியவர்களின்
நினைவுப் பரிசுகள் போன்றவற்றை நிலவில் என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்ய முடியும். ஸ்பேஸ்-10
என்ற ராக்கெட்டின் மூலமாக அனுப்பி வைக்கப்படும் லூனார் விண்கலத்தில் நமது பொருள்கள்
அனுப்பிவைக்கப்பட உள்ளது.
மேலும், நாம் அனுப்பும் பொருள்களுள் மிகச்சிறிய, அதே நேரம் கவர்ச்சிகரமான பொருள்
தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். ஸ்பேஸ்-10
ராக்கெட்டில் மொத்தம் 2 விண்கலங்கள் உள்ளன. ஒரு விண்கலமானது நிலவின் மேற்பகுதியில்
தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மற்றொன்றான போலரிஸ் ரோவர்வகை விண்கலமானது
நிலவில் சக்கரங்களின் உதவியுடன் நகரும் வகையில் உள்ளது. புவியின் வளி மண்டல மேற்பரப்பை
அடையும் வரையில் இந்த இரண்டு விண்கலங்களும் இணைந்தே இருக்கும். அதன்பிறகே பிரியும்.
தற்போது ஆன்லைனிலும் நம்முடைய ஆர்டர்களை அனுப்பிவைக்க முடியும்.
நாம் நமது
ஆர்டரைக் கொடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தியவுடன் மூன் மெயில் கிட் ஒன்று நமக்காக
அனுப்பிவைக்கப்படும். அதில் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ள பகுதியின்
புகைப்படம், முதல் வர்த்தக மூன்மெயில் சேவையின் பயனர் நாம் என்பதற்கான அங்கீகாரச் சான்றிதழ்
ஆகியவை இதனுள் இருக்கும். நாம் அனுப்பும் பொருள்களானது நிலவில் நிரந்தரமாக விட்டுவரப்படும்.
நிலவில் தரையிறங்கும் அஸ்ட்ரோபோடிக் தொழில் நுட்பமானது அதிநவீன கேமராக்கள் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்-10
ராக்கெட்டின் மூலம் இந்த விண்கலமானது இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அனுப்பப்பட உள்ளது.
நம் எல்லோராலும் நிலவுக்குப்
போவது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் கூட
2020 ல் தான் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே இன்னும் 2 ஆண்டுகளுக்குள்
மனிதனின் நினைவுப்பொருள்களைச் சுமந்தபடி நிலவுக்குப் பயணிக்க இருக்கிற விண்கலம் என்றும்
நினைவில் நிலைத்து நிற்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
பி.கு: மூன் மெயிலுக்கு
ரிப்ளை வராது…Understand…!!
ரஞ்சித் வைத்தியலிங்கம்
No comments:
Post a Comment