அன்று..
ஆகாயத்தையே
வெறித்துப் பார்க்கிறேன்...
பொய்த்த மழை
பொழியும் என்றா...?
விட்ட வெயில்
பூமி வந்து
தொடும் என்றா....?
இல்லை..
அதோ அந்த
ஈழத்துக்
கடற்பரப்பின் மேலே
ஒரு கடற்பறவை
பறந்து கொண்டிருக்கிறது
தனி ஈழம் தேடி
உருக்குலைந்த
உடல்களைப் பார்த்து..