கரும்பலகை கிறுக்கல்கள்
Saturday, May 26, 2012
............நடைபிணங்கள்......
காதலில்
தனித்திருப்பதும்
தனிமையில்
தவித்திருப்பதும்..
உயிரிருந்தும்
மூர்ச்சையில்லாமல்
உணர்விழப்பதும்..
பிரிவின் வலியா..?..!!
காதலின் பிழையா..?..!!
நேசமிகு
வை.ர..
Thursday, May 24, 2012
............உருவமிலா ஒருவன் ......
மரணத்தின் கடைசி
நொடிகளில்
கண் முன் தெரிவதுதான்
கடவுள்..
இப்போது சொல்..?
கடவுளைப் பார்க்க
விருப்பமா..
மரணத்தை ஒத்திப்போட
விருப்பமா..?
நேசமிகு
வை.ர..
Wednesday, May 23, 2012
................தேடல்... .....
மழலைப்பேச்சு
காதலியின் முத்தம்
பிரிவின் சோகம்
இவற்றிலும் உள்ளது..
எனக்கான தேடல்...
நேசமிகு
வை.ர..
............யாசிக்கிறேன் யான்..........
மழைத்திவலைகளாக
உன் நினைவுகள்
என் மனதில்...
பிரவேசிக்க ..
கணத்த
என் மனம்
காற்றில்
கண்ணீர்த்துளிகளாகி
கரைந்து விரைகிறது..
எனை நீங்கிச் சென்ற
உன்னிடம் ..
நேசமிகு
வை.ர..
Sunday, May 20, 2012
....................சுடர்..........
உன் பிறப்பின் ரகசியம்
சொல்கிறேன் கேள்...
அன்றுதான்
அதிசயம் இந்த உலகில்
உதயம்..
..
நேசமிகு
வை.ர..
Sunday, May 6, 2012
....................வெகுமதி .............
ஆற்று நீரில் ஓடம் போவதாய்
அன்று நீ சொன்ன கதையும்
காயங்களின்
மருந்தென
கண்ணீர் ஆகுமென்று
நீ சொன்ன கவிதையும்
இன்று வரை காட்டவே இல்லை...?
வேறெந்த கம்பனையும்
வோர்ட்ஸ் வார்த்தையும்.
நேசமிகு
வை.ர..
Saturday, May 5, 2012
ஒற்றை மரம்
மாநகரப் பூங்காவில்
இருக்கைகள்
காலியாக இருக்கின்றன.
மாடி வீடுகளில் வசிப்பவர்கள்
செங்கற்களின் கூட்டுக்குள் தன்னை
சிறைப்படுத்திக் கொள்ளும்பொழுது..
நேசமிகு
வை.ர..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)